Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலக கோப்பை யாருக்கு? இன்று இந்தியா-ஆஸ்திரேலியா பலப்பரீட்சை..!

Advertiesment
உலக கோப்பை யாருக்கு? இன்று இந்தியா-ஆஸ்திரேலியா பலப்பரீட்சை..!
, ஞாயிறு, 19 நவம்பர் 2023 (08:24 IST)
கடந்த சில நாட்களாக உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்தியா இதுவரை ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் 10 போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் அதன் பின் சுதாரித்து விளையாடி  அரையிறுதி போட்டியிலும் தென்னாப்பிரிக்காவை அபாரமாக வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஏற்கனவே இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி நடந்த  2003ஆம் ஆண்டு இறுதி போட்டியில் மோதியது என்பதும் அதில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. இருபது ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலியாவை பழிவாங்க இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் அதனை பயன்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .

இந்த நிலையில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலும் தற்போது மிகச் சிறந்த பார்மில் உள்ளது. ரோகித் சர்மா,  கேஎல் ராகுல், சூரியகுமார் யாதவ்,  ஜடேஜா, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகிய  பேட்ஸ்மேன்கள்  பார்மில் உள்ளனர். அதேபோல் முகமது ஷமி, சிராஜ், பும்ரா, ஜடேஜா ஆகியோர் பந்துவீச்சிலும் சிறப்பாக உள்ளனர்.  

மொத்தத்தில் இரண்டு அணிகளும் சம பலத்தில் உள்ளதால் இன்றைய இறுதிப்போட்டி பார்வையாளர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''அவருக்காக கோப்பை வெல்வது எங்களது கடமை’’- ரோஹித் சர்மா