Webdunia - Bharat's app for daily news and videos

Install App

36 ஆண்டுகளுக்கு பின் உலக பேட்மிண்டன் தொடரில் இந்தியாவுக்கு பதக்கம்!

Webdunia
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (20:00 IST)
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் இருந்து இரண்டு பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகி உள்ளதால் இந்திய பேட்மிட்டன் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர் 
 
 
இன்று நடைபெற்ற பெண்கள் பிரிவு காலிறுதி போட்டியில் தவான் வீராங்கனையை எதிர்கொண்ட இந்தியாவின் பிவி சிந்து முதல் செட்டில் பின் வாங்கினாலும் அடுத்த இரண்டு செட்டுகளை கைப்பற்றி தைவான் வீராங்கனையை தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்துவிற்கு ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது 
 
 
இதேபோல் ஆடவர் பிரிவில் இந்தியாவின்  சாய் பிரனீத், இந்தோனேஷியா வீரரை 24-22, 21-14 என்ற நேர் செட்டில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இதனால் ஆண்கள் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரிலும் ஒரு பதக்கம் இந்தியாவுக்கு கிடைப்பது உறுதியாகி உள்ளது. கடந்த 1983 ஆம் ஆண்டுக்கு பின்னர் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் ஆண்கள் பிரிவில் இந்தியாவிற்கும் பதக்கம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது எனவே தற்போது 36 ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் ஆண்கள் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்க உள்ளது

தொடர்புடைய செய்திகள்

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments