Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

Webdunia
வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (16:45 IST)
முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று முதல் ஆரம்பித்துள்ள நிலையில் இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே முதல் போட்டி நடைபெற்றது 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானித்ததை அடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க ஆட்டக்காரர் வர்மா 29 ரன்களும் ரோட்ரிகஸ் 26 ரன்களும் எடுத்தனர். கடைசி நேரத்தில் தீப்திசர்மா அதிரடியாக விளையாடி 49 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தநிலையில் 133 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய மகளிர் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனை அடுத்து இந்திய அணி தனது முதல் வெற்றியை இந்த உலக கோப்பை தொடரில் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பூனம் யாதவ் மிக அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
 
நாளை தாய்லாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையே போட்ட நடைபெறும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

வயதை குறைத்து சொல்லி ஏமாற்றினாரா வைபவ் சூர்யவன்ஷி?... தந்தை ஆவேசம்!

ஆஸ்திரேலியா தொடருக்கு நடுவே திடீரென இந்தியா திரும்பிய கம்பீர்!

அடுத்த கட்டுரையில்
Show comments