Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு முறை தோல்விக்கு சென்னையை பழிவாங்குமா ஹைதராபாத்?

Webdunia
செவ்வாய், 22 மே 2018 (18:29 IST)
ஐபிஎல் 2018 தொடரின் பிளே ஆப் சுற்றின் முதல் போட்டியில் ஹைதராபாத் - சென்னை அணிகள் விளையாடுகிறது.

 
ஐபிஎல் 2018 லீக் தொடரில் முதல் 4 இடங்களை பிடித்த ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இன்று பிளே ஆப் சுற்றின் முதல் போட்டி சென்னை - ஹைதராபாத் அணிகள் இடையே நடைபெறுகிறது. 
 
இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேறும். ஹைதராபாத் அணி இதுவரை சென்னை அணியுடன் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மூன்றாவது முறையாக இரு அணிகள் விளையாடுகிறது. 
 
இதில் வெற்றி பெற போவது யார்? என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்பில் உள்ளனர். கேப்டனாக கேன் வில்லியம்சன் இந்த சீசனில் அதிக கவனத்தை ஈர்த்தவர். சென்னை அணி இரண்டு ஆண்டுகள் கழித்து தோனி தலைமையில் விளையாடி வருகிறது. 
 
தோனிக்கு ஏற்கனவே ரசிகர்கள் பலர் உள்ளனர். தோனி மீண்டும் தனது அதிரடி ஸ்டைலில் களமிறங்கியது ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.
 
இரு அணிகளுக்கும் ரசிகர்கள் பெரும் அளவில் உள்ள நிலையில் இருவரில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு பெரும் அளவில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ராவுக்கும் ரோஹித்துக்கும் நன்றி… மீண்டும் இந்திய ரசிகர்களை ‘சைலன்ஸ்’ ஆக்கிய கம்மின்ஸ்!

கடுமையாகவே போராடினோம்… கேப்டன் பும்ரா வருத்தம்!

‘எங்களுக்கு என்ன கிரிக்கெட்டா தெரியும்?.. நாங்க டிவில பேசுறவங்கதானே?’- ஊமைக் குத்தாய் குத்திய கவாஸ்கர்!

மாற்றங்கள் நன்மைக்கே…இந்திய அணி குறித்து கம்பீர் கருத்து!

மூன்றாம் நாளில் இரு அணி வீரர்களும் பிங்க் நிற ஜெர்ஸியில் விளையாடக் காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments