கடைசி பந்து ஹீரோவை கேப்டனாக ஏற்றுக்கொள்வார்களா கொல்கத்தா ரசிகர்கள்?

Webdunia
திங்கள், 19 மார்ச் 2018 (16:45 IST)
தினேஷ் கார்த்திக் ஐபிஎல்2018 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டதை எதிர்த்த கொல்கத்தா ரசிகர்கள் தற்போது அவரை கேப்டனாக ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 
நேற்று நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற செய்தார். கடைசி பந்தில் இந்திய அணி வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தினேஷ் கார்த்திக் சிக்ஸர் விளாசி அசத்தினார்.
 
19வது ஓவரில் தினேஷ் கார்த்திக் 22 ரன்கள் குவித்தார். இறுதிப் போட்டியில் அவர் 8 பந்துகளில் 29 ரன்கள் குவித்து அசத்தினார். இந்நிலையில் அவர் தற்போது இந்தியாவின் ஹீரோவாக வலம் வருகிறார். சமூக வலைதளங்களில் அவரை பாராட்டி மீம்ஸ் போட்டி வருகின்றனர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்.
 
ஐபிஎல்2018 போட்டிகள் அடுத்த மாதம் துவங்க உள்ளது. இதில் தினேஷ் கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு கொல்கத்தா ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டர் தங்களது கருத்துகளை பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.
 
தற்போது இந்திய அணியை கடைசி நேரத்தில் வெற்றி பெற செய்து ஹீரோவாக மாறிய தினேஷ் கார்த்திக்-ஐ கொல்கத்தா அணியின் கேப்டனாக ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments