Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை 2019 ; இந்தியா பாகிஸ்தான் போட்டி நடக்குமா ? – தாக்குதலால் குழப்பம் !

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (12:58 IST)
புல்வாமாத் தாக்குதலை அடுத்து உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலானப் போட்டி நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

காஷ்மீரில் பிப்ரவரி 14 ஆம் தேதியன்று ஜெய்ஸ் இ முகமது ஏன்ற பயங்கரவாத அமைப்பால் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 41 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். தற்கொலைப் படைத் தீவிரவாதி அதில் அகமது 350 கிலோ எடைக் கொண்ட வெடிப்பொருட்களோடு அதிகாலை நேரத்தில் இந்திய வீரர்களின் வாகனத்தில் மோதி இந்தத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளார்.

தாக்குதல் நடத்திய பயங்கரவாதக் குழுவிற்கு பாகிஸ்தான் ஆதரவளித்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து பாகிஸ்தானை வர்த்தகத்திற்கு உகந்த நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா நீக்கியுள்ளது. பதில் தாக்குதல் நடத்தும் விதமாக இந்திய பாகிஸ்தான் எல்லையில் போர்விமானங்களைக் கொண்டு சோதனை முயற்சியும் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் போர் மூளும் அபாய சூழல் உருவாகியுள்ளது.

இந்த தாக்குதல் இப்போது கிரிக்கெட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்குப் பின்னர் இனி இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் பைலேட்ரல் சீரிஸ் போட்டிகள் நடக்க வாய்ப்பில்லை என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அதனால் மே மாதம் தொடங்கும் உலகக்கோப்பை தொடரில் இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலானப் போட்டியில் இந்தியா கலந்துகொள்ளுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து பிசிசிஐ இன்னும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.

இதுபோல ஏற்கனவே 2003 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரானப் போட்டியில் விளையாட மறுத்தது. அதனால் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

300 ரன்களை கடந்த ஆஸ்திரேலிய அணி.. முதல் நாள் ஆட்ட முடிவில் ஸ்கோர் விவரம்..!

ஆஸ்திரேலிய வீரருடன் மோதல்: விராட் கோலிக்கு 20% அபராதம்..!

தோனியப் பாத்தே பத்து வருஷம் இருக்கும்… மீண்டும் சி எஸ் கேவுக்கு செல்வது குறித்து அஸ்வின்!

அறிமுக வீரர் கோன்ஸ்டாண்டை சீண்டிய கோலி… அனல் பறந்த தருணம்!

என் கிரிக்கெட் வாழ்க்கையில் நடக்காத ஆசை இதுதான்… அஸ்வின் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments