Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிசிசிஐ அனுமதிக்காக காத்திருக்கும் நடராஜன்!

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (12:28 IST)
தமிழக வீரர் நடராஜன் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் விளையாட பிசிசிஐ யின் அனுமதிக்காக காத்திருக்கிறார்.

டிஎன்பிஎல் கிரிக்கெட் மூலமாக தனது திறமையை நிரூபித்து ஐபிஎல்லில் இடம்பிடித்ததோடு மட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்திய அணியிலும் இடம்பெற்று சாதனை படைத்தவர் நடராஜன். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின்போது தனது மனைவிக்கு குழந்தை பிறந்தபோது நாட்டிற்காக விளையாடுவதை முக்கியமாக கருதி வெற்றியை ஈட்ட உதவிய நடராஜனுக்கு மக்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் இப்போது நடக்க உள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு அவர் தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் அவர் விளையாட ஆர்வமாக இருக்கிறார். பிசிசிஐ அனுமதி அளிக்கும் நிலையில் அதில் விளையாடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2025ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு ரூ.6000 கோடி வருமானம்?

இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர்.. முதல் சுற்றில் பிவி சிந்து தோல்வி..!

6 நிமிடத்தில் 10 லட்சம் லைக்குகள்… சாதனைப் படைத்த ஹர்திக் பாண்ட்யாவின் புகைப்படம்!

இந்தியா ஏ அணியுடன் இங்கிலாந்து செல்லும் கம்பீர்… காரணம் என்ன?

சாம்பியன்ஸ் கோப்பை தோல்வி… பாகிஸ்தான் அணியில் பல அதிரடி மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments