Publish Date: Tue, 02 Feb 2021 (10:31 IST)
Updated Date: Tue, 02 Feb 2021 (10:33 IST)
பெங்களூர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன சசிக்கலா அதிமுக கொடி பொருத்திய காரில் சென்றது குறித்து அதிமுக நிர்வாகிகள் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையான நிலையில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் குணமடைந்து சமீபத்தில் டிஸ்சார்ஜ் ஆன அவர் முன்னாள் ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்த நிலையில் அதில் பயணித்தார்.
அதை தொடர்ந்து சசிக்கலா அதிமுக கொடியை பயன்படுத்த அவருக்கு உரிமையில்லை என அதிமுகவினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் கட்சியின் கொடியை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாக சசிக்கலா மீது அதிமுக நிர்வாகிகள் சேலம் மாநகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.