Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 கேட்ச் மிஸ்ஸிங், 20வது ஓவரில் ஸ்பின்: சிஎஸ்கே செய்த அடுத்தடுத்த தவறுகள்!

Webdunia
ஞாயிறு, 18 அக்டோபர் 2020 (08:06 IST)
வழக்கம்போல் வெற்றி பெற வேண்டிய ஒரு போட்டியை சிஎஸ்கே அணியின் சொதப்பல் ஆட்டம் காரணமாகத்தான் நேற்று தோல்வி அடைந்தது. நேற்றைய போட்டியில் தவானுக்கு நான்கு முறை கேட்ச் நழுவிடப்பட்டது. முதலாவதாக தீபக் சஹார், இரண்டாவதாக வாட்சன், மூன்றாவதாக தோனி மற்றும் நான்காவதாக அம்பத்தி ராயுடு என நான்கு முறை அவருக்கு கேட்ச் தவறவிடப்பட்டது.
 
ஒரு மொக்கை பேட்ஸ்மேனாக இருந்தால்கூட 4 முறை கேட்ச் தவறவிட்டால் அவர் செஞ்சுரி அடிப்பார் என்பது இயல்பான ஒன்று தான். அவ்வாறு இருக்கும்போது தவான் போன்ற திறமையான பேட்ஸ்மேனுக்கு நான்கு முறை கேட்ச் தவறவிட்டது மிகப்பெரிய தவறாகும் 
 
மேலும் நேற்றைய போட்டியில் தோனி முக்கியமான கட்டத்தில் பேட்டிங்கில் களமிறங்கி சொற்ப ரன்களுக்கு அவுட் ஆனது ஒரு கேப்டன் என்ற பொறுப்பை அவர் உணரவில்லை என்பதையே காட்டுகிறது. மேலும் நேற்றைய போட்டியில் வெறும் பீல்டிங் மட்டுமே செய்வதற்கு கேதார் ஜாதவ்வை இறக்க வேண்டுமா? அவருக்கு பதில் ஜெகதீசனை இறக்கியிருக்கலாமே? ஒரு கூடுதல் பேட்ஸ்மேன் கிடைத்திருக்கும்
 
அதுமட்டுமின்றி 20 ஓவரில் களத்தில் இரண்டு இடதுகை பேட்ஸ்மேன்கள் இருக்கும் நேரத்தில் இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஜடேஜாவை இறக்க வேண்டிய நிலைக்கு தோனி தள்ளப்பட்டார். அதனால் அந்த ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில் மிக எளிதாக இலக்கு எட்டப்பட்டு டெல்லி அணி வெற்றி பெற்றது 
 
20 ஆவது ஓவரை வீச பிராவோவுக்கு வாய்ப்பு இருந்தும் அவருக்கு வழங்கவில்லை. அவர் உடல்நலம் தகுதி இல்லாமல் இருப்பதாகவும் அதனால்தான் ஜடேஜாவுக்கு கொடுத்ததாகவும் தோனி பேட்டியில் கூறியிருந்தார். இருப்பினும் தீபக் சஹாருக்கு ஒரு ஓவர் மீதம் வைத்திருந்ததால் அந்த இருபதாவது வரை சமாளித்து இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் நேற்றைய தோனியின் கேப்டன்சி மிஸ்ஸிங் மற்றும் மோசமான பீல்டிங் ஆகியவை காரணமாகவே சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments