Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணை தலைவர்! – விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு!

Webdunia
ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (15:53 IST)
சர்வதேச செஸ் கூட்டமைப்பான (FIDE)ன் துணைத் தலைவராக இந்திய செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன்முறையாக இந்தியாவில் அதுவும் சென்னையில் நடந்து வருவது உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் சர்வதேச செஸ் கூட்டமைப்பில் இந்தியாவின் பங்களிப்பு மேலும் அதிகரித்துள்ளது.

ஆம், சென்னையில் தற்போது நடந்த சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தேர்தலில் இந்திய செஸ் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் கூட்டமைப்பின் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னதாக தலைவராக பொறுப்பு வகித்த ஆர்காடி ட்வார்கோவிச் 2வது முறையாக மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச செஸ் கூட்டமைப்பில் இந்தியாவின் சாம்பியன் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தடுத்து செஸ் போட்டிகளில் இந்தியாவின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியுடன் இந்திய வீரர்கள் சந்திப்பு..! மும்பையில் இன்று மாலை பாராட்டு விழா..!!

மைக் மோகனின் ஹரா படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? எந்த ப்ளாட்பார்மில்?

15 திருமண நாளை கேக் வெட்டிக் கொண்டாடிய தோனி- சாக்‌ஷி தம்பதி!

சாம்பியன்ஸ் டிரோபியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி… தேதி பற்றிய தகவல்!

ஒருவழியாக தாய்நாடு திரும்பிய இந்திய வீரர்கள்…. உற்சாக வரவேற்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments