Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத் தகுதி நீக்கம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

Mahendran
புதன், 7 ஆகஸ்ட் 2024 (12:22 IST)
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த பிரிவில் இறுதி போட்டிக்கு தகுதியை பெற்றுள்ள இந்தியாவின் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
50 கிலோ எடை பிரிவில் பங்கேற்றுள்ள வினேஷ் போகத் கூடுதலாக 100 கிராம் எடை இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மல்யுத்த பிரிவில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு பறிபோனதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் இந்திய வீராங்கனை தகுதி நீக்கத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது இந்தியாவுக்கு எதிராக செய்யப்படும் சதி என்றும் ஒலிம்பிக் போட்டியை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
முன்னதாக மல்யுத்த பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் அரை இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபன் என்பவருடன்  மோதினர். பரபரப்பாக நடந்த இந்த போட்டியில்  இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கியூபா வீராங்கனை குஸ்மானை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி  வெற்றிபெற்றார்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

களத்தில் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.. கோலி குறித்து சஞ்சய் பாங்கர் கருத்து!

பயிற்சியின் போது இடது காலில் காயமான ரோஹித் ஷர்மா… வைரலான புகைப்படம்!

பயிற்சியின் போது காயமடைந்த முன்னணி வீரர்… இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஜாகீர் கானை பாக்குற மாதிரியே இருக்கு! சிறுமி பந்து வீசும் வீடியோவை ஷேர் செய்த சச்சின் டெண்டுல்கர்!

சாம்பியன்ஸ் ட்ராபி விவகாரம்; பாகிஸ்தானுக்கு ரூ.38 கோடி வழங்கும் ஐசிசி! - ஆகாஷ் சோப்ரா கடும் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments