Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யாரோ 2 பேர அடிச்சு சாம்பியன் ஆகல.. அடிச்ச 2 பேருமே சாம்பியன்தான்! - வினேஷ் போகத் படைத்த மகத்தான சாதனைகள்!

Advertiesment
Vinesh Phogat

Prasanth Karthick

, புதன், 7 ஆகஸ்ட் 2024 (11:00 IST)

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் முதன்முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இந்த போட்டியின் மூலம் பல சாதனைகளை படைத்துள்ளார்.

 

 

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்கி பல நாடுகளும் தங்கம், வெள்ளி என பதக்கங்களை அள்ளி சென்றுவரும் நிலையில் இந்தியா தனது முதல் தங்கம், வெள்ளி பதக்கங்களை கூட வெல்லாமல் பின் தங்கியுள்ளது. இந்தியாவுக்காக தங்கம் வென்று தருவார்கள் என இந்தியர்கள் நம்பிக்கை பல வீரர்களின் வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 

அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக தற்போது பெண்களுக்கான 50 கிலோ மல்யுத்த பிரிவில் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார் வினேஷ் போகத். அரையிறுதி போட்டியில் க்யூப வீராங்கனை யுஸ்னெய்லிஸ் கஸ்மன் லோப்பஸை 5-0 என்ற கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு நுழையும் முதல் இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.

 

முன்னதாக ரவுண்ட் - 16ல் வினேஷ் போகத் ஜப்பானிய மல்யுத்த வீராங்கனையான யூ சுசாகியை எதிர்கொண்டு வெற்றி பெற்றார். உலக மல்யுத்த வீராங்கனைகளில் முன்னணியில் இருக்கும் யூ சுசாகி இதுவரை போட்டியிட்ட 82 போட்டிகளிலும் வெற்றி மட்டுமே கண்டவர். 3 முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றவர். அப்படியான வீராங்கனையை தோற்கடித்த சாதனையை வினேஷ் போகத் படைத்துள்ளார்.

 

அதுபோல காலிறுதி போட்டியிலும் உக்ரைன் மல்யுத்த வீராங்கனை ஒக்சானா லிவாச்சை 7-5 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார் வினேஷ் போகத். மல்யுத்த விளையாட்டில் உலகின் முன்னணி வீராங்கனைகளாக உள்ளவர்களை அடுத்தடுத்து வீழ்த்தி இறுதி போட்டியை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளார் வினேஷ் போகத். இன்று இரவு 12 மணியளவில் நடைபெற உள்ள இறுதி போட்டியில் அமெரிக்க வீராங்கனை சாரா அன் ஹில்டப்ரண்ட் உடன் வினேஷ் போகத் மோத உள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாநில அளவிலான காலடி குத்து வரிசை சாம்பியன்ஷிப் சிலம்பாட்டம் லீக் போட்டி!