Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் முடியாது என்று சொல்ல முடிகிறது… இந்தியாவில் சொல்ல முடியுமா? உஸ்மான் கவாஜா கேள்வி!

Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (10:20 IST)
பாகிஸ்தான் நாட்டில் கிரிக்கெட் விளையாட முடியாது என்று நியுசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மறுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானில் சென்று கிரிக்கெட் விளையாட எந்த வொரு அணியும் முன்வருவதில்லை. 10 ஆண்டு காலமாக துபாயில்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் போட்டிகள் நடந்து வருகின்றன. இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் சென்ற போது அவர்களின் பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதே இதற்குக் காரணம்.

இந்நிலையில் இப்போது நிலைமை மெல்ல மெல்ல மாறி சில நாடுகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். அப்படி நியுசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி 20 போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் சென்றது. ஆனால் தொடர் தொடங்க இருந்த கடைசி நேரத்தில் நியுசிலாந்து கிரிக்கெட் வாரியம் வீரர்களின் பாதுகாப்பு காரணமாக தொடரை ரத்து செய்துவிட்டது. அதுபோல இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் தாங்கள் செல்ல மாட்டோம் என அறிவித்து விட்டன.

இதுகுறித்து பேசியுள்ள ஆஸி வீரர் உஸ்மான் கவாஜா ‘ பாகிஸ்தான் என்பதால் வீரர்களால் எளிதாக விளையாட முடியாது என்று சொல்ல முடிகிறது. ஆனால் இதுவே இந்தியாவில் பாதுகாப்பு பிரச்சனை என்றால் சொல்ல முடியாது. ஏனென்றால் அங்கு பணம்தான் பேசும். இப்போது கிரிக்கெட்டை முடிவு செய்வதில் பணம்தான் முக்கியப் பங்கு வகிக்கிறது. கிரிக்கெட் விளையாட பாகிஸ்தான் பாதுகாப்பான நாடு என்று அந்நாட்டு அரசு சொல்லி வருகிறது. அப்படி இருக்கும்போது ஏன் நாம் அங்கு சென்று விளையாடக் கூடாது?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

டென்பின் பந்து வீச்சில் அபிஷேக்கை வீழ்த்தி பட்டத்தை வென்றார் கணேஷ்!

உங்களுக்காகதான் இம்பேக்ட் பிளேயர் விதி உருவாக்கப்பட்டுள்ளது… கெயிலை மீண்டும் ஐபிஎல் விளையாட அழைத்த கோலி!

RCB வீரர்கள் தோனியை அவமதித்தார்களா?... மைக்கேல் வாஹ்ன் சொன்ன கருத்து!

தோனி ஓய்வு பற்றி என்ன சொன்னார்? சி எஸ் கே CEO காசி விஸ்வநாதன் பகிர்ந்த தகவல்!

இதெல்லாம் ஒரு பொழப்பா.. ஸ்டார் ஸ்போர்ட்ஸை கழுவி ஊற்றிய கவுதம் கம்பீர்! – வைரலாக்கும் நெட்டிசன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments