Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை கால்பந்து: ரஷ்யா தோல்வி: உருகுவேயிடம் சரண்

Webdunia
செவ்வாய், 26 ஜூன் 2018 (07:03 IST)
உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்தி வரும் ரஷ்யா, நேற்றைய போட்டியில் உருகுவே அணியுடன் மோதியது. இந்த போட்டியில் ரஷ்ய வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடியபோதிலும் உருகுவே அணியிடம் 0-3 என்ற கோல்கணக்கில் தோல்வி அடைந்தது
 
நேற்றைய போட்டியில் உருகுவே அணியின் சுவாரஸ் 10வது நிமிடத்திலேயே கோல் அடித்து ரஷ்யாவுக்கு அதிர்ச்சி அளித்தார். அதனை தொடர்ந்து 23வது நிமிடத்தில் டெனி ஷெர்சேவ் என்பவர் ஒரு கோல் அடித்ததால் முதல் பாதியின் முடிவில் உருகுவே 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது
 
இந்த கோல்களை சமன்படுத்த ரஷ்ய வீரர்கள் முயற்சித்தும் உருகுவே அதற்கு இடம் கொடுக்கவில்லை. அதுமட்டுமின்றி ஆட்டத்தின் 90வது நிமிடத்தின் உருகுவே அணியின் எடின்சன் இன்னொரு கோல் அடித்ததால் உருகுவே அணி 3-0 என்ற கோல் கணக்கில்  வெற்றி பெற்றது. 
 
இந்த வெற்றியால் ஏ பிரிவில் உருகுவே அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ரஷ்யா 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா vs இங்கிலாந்து: கடைசி ஓவரில் த்ரில் வெற்றி.. கொண்டாடிய சென்னை ரசிகர்கள்..!

ஹர்திக் ஏன் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது புரியவில்லை... தினேஷ் கார்த்திக் ஆச்சர்யம்!

இன்றைய போட்டியில் பனியின் தாக்கம் இருக்குமா?.. டாஸ் வெல்லும் அணி எடுக்கப்போகும் முடிவு!

அதிரடி மன்னன் அபிஷேக் ஷர்மா இன்றைய போட்டியில் விளையாட மாட்டாரா?

ரஞ்சி போட்டியில் சதமடித்து விமர்சனங்களுக்கு பதில் கொடுத்த ஷுப்மன் கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments