Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் தோல்வியை அடுத்து வெற்றியுடன் துவக்குமா இந்தியா?

Webdunia
வியாழன், 12 மார்ச் 2020 (07:35 IST)
சமீபத்தில் நடந்து முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் டி20 தொடரை மட்டுமே வென்ற இந்திய அணி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை பரிதாபமாக இழந்தது. இந்த நிலையில் விராத் கோலி தலைமையிலான இந்திய அணி இன்று முதல் தென் ஆப்பிரிக்க அணியுடன் டி20 தொடரில் விளையாட உள்ளது 
 
இந்தியாவில் நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி இன்று தர்மசாலா மைதானத்தில் நடைபெற உள்ளது. நியூசிலாந்தில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி இன்று வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்
 
விராட் கோலி, ரோஹித் சர்மா, தவான், ஸ்ரேயாஸ் அய்யர், ரவிந்திர ஜடேஜா ஆகியோர் பேட்டிங்கில் இன்றைய போட்டியில் ஜொலிக்க வேண்டும் என்றும் அதேபோல் பும்ரா, புவனேஷ் குமார்,  குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர்  பந்துவீச்சிலும் தங்கள் முழு திறமையையும் வெளிப்படுத்த  வேண்டும் என்றும் அப்போதுதான் பலமான தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ள முடியும் என்றும் கிரிக்கெட் வர்ணனையாளர் கருத்து தெரிவித்துள்ளனர் 
 
அதேபோல் தென்ஆப்பிரிக்க அணியில் குவின்டன் டி காக், டுப்லஸ்ஸிஸ், கேசவ மகாராஜ்,டேவிட் மில்லர், நிகிடி உள்பட பலர் நல்ல பார்மில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய அணி முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளே மருத்துவமனையில் அனுமதி!

பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளுக்கும் ஷமி கிடையாது.. காரணம் இதுதான்!

கோலி ஒரு கொடுமைக்காரர்… ஆஸ்திரேலிய ஊடகவியலாளர் தாக்குதல்!

சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா விளையாடும் போட்டிகளுக்கான மைதானம் இதுதான்!

ஸ்மிருதி மந்தனா அபார பேட்டிங்.. 211 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் மகளிர் அணி தோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments