Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மூன்று பேருக்கு கொரோனா! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Webdunia
செவ்வாய், 23 ஜூன் 2020 (07:24 IST)
பாகிஸ்தான் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செல்வதற்கு முன்னர் எடுக்கப்பட்ட கொரோனா சோதனையில் மூன்று பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்த மாதம் 24 ஆம் தேதி இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ள இருந்தது. அங்கு இரு அணிகளும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளன. அதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக ஹைதர் அலி, ஹரீஷ் ராஃப் மற்றும் ஷாதப் கான் ஆகிய மூன்று பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் மூவருக்கும் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை.

இதையடுத்து இவர்கள் மூவரும் பாகிஸ்தானில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அந்நாட்டின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரிடிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. இதுவரை பாகிஸ்தானில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.81 லட்சமாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா இல்லைன்னா என்ன?... சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குறித்து கபில் தேவ் கருத்து!

தோனியின் கண்களைப் பார்த்தால் நடுங்குவோம்.. ஷிகார் தவான் பகிர்ந்த தகவல்!

கௌதம் கம்பீருக்குமா கட்டுப்பாடு… கறாராக சொன்ன பிசிசிஐ!

இலங்கையிடம் ஒருநாள் போட்டி தொடரை இழந்த ஆஸ்திரேலியா.. ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளியா?

என்னை கிங் என்று அழைக்காதீர்கள்… பாபர் ஆசம் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments