Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தி ஃபிரீடம் சீரிஸ் - இந்தியாவுக்கு கைமாறு செய்த தென் ஆப்பரிக்கா

Webdunia
சனி, 23 டிசம்பர் 2017 (16:58 IST)
இந்தியாவுக்கு கைமாறு செய்யும் வகையில் இந்தியா - தென் ஆப்பரிக்கா அணிகள் இடையே நடைபெறும் தொடருக்கு தென் ஆப்பரிக்கா கிரிக்கெட் வாரியம் புதிய பெயர் வைத்துள்ளது.

 
இலங்கை அணியுடன் நடைபெற்று வரும் இரண்டாவது டி20 போட்டி தொடர் முடிந்த பின் இந்திய அணி தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணம் செல்கிறது. அங்கு தென் ஆப்பரிக்க அணியுடன் 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
 
2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா - தென் ஆப்பரிக்கா அணிகள் விளையாடும் தொடருக்கு தென் ஆப்பரிக்க கிரிக்கெட் வாரியம் புதிய பெயர் ஒன்றை வைத்துள்ளது.
 
‘தி ஃபிரீடம் சீரிஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 1991ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகில் காலடி எடுத்து வைக்க உதவிய இந்தியாவுக்கு கைமாறு செய்யும் வகையில் இந்த தொடருக்கு பெயரிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தென் ஆப்பரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
 
இந்த தொடருக்கு முதலில் ஃப்ரண்ட்ஷிப் சீரிஸ் என்றுதான் பெயரிட இருந்தோம். நிறவெறிக்கு எதிரான நாடுகளில் இந்தியா முக்கியமானது. அகிம்சை வழியில் சுந்தந்திரம் பெற்ற இந்தியா மற்றும் தென் ஆப்பரிக்கா ஆகிய இருநாடுகளின் வரலாற்று பாரம்பரியத்தை அங்கீகரிக்கும் வகையில் சிறந்த பெயராக ‘தி ஃபிரீடம் சீரிஸ்’ இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ராவுக்கும் ரோஹித்துக்கும் நன்றி… மீண்டும் இந்திய ரசிகர்களை ‘சைலன்ஸ்’ ஆக்கிய கம்மின்ஸ்!

கடுமையாகவே போராடினோம்… கேப்டன் பும்ரா வருத்தம்!

‘எங்களுக்கு என்ன கிரிக்கெட்டா தெரியும்?.. நாங்க டிவில பேசுறவங்கதானே?’- ஊமைக் குத்தாய் குத்திய கவாஸ்கர்!

மாற்றங்கள் நன்மைக்கே…இந்திய அணி குறித்து கம்பீர் கருத்து!

மூன்றாம் நாளில் இரு அணி வீரர்களும் பிங்க் நிற ஜெர்ஸியில் விளையாடக் காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments