Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி – இன்று சென்னை வரும் இந்திய வீரர்கள்!

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2021 (17:21 IST)
இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் போட்டி எதிர்வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதில் முதல் டெஸ்ட் ஆட்டம் 5 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இங்கிலாந்திலிருந்து முன்கூட்டியே வரும் கிரிக்கெட் வீரர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட உள்ளனர். அதன்படி இங்கிலாந்து வீரர்கள் இன்று சென்னை வந்தடைந்தனர். சென்னை விமான நிலையம் வந்த அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதன்பிறகு ஓட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள். தனிமைப்படுத்திய காலம் முடிவடைந்த பின்னர் ஒன்றாக இணைந்து பயிற்சி மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்திய வீரர்கள் ரோஹித் ஷர்மா, ஷர்துல் தாக்கூர் மற்றும் ரஹானே ஆகியோர்  நேற்று சென்னை வந்து சேர்ந்தனர். கோலி உள்ளிட்ட மற்ற வீரர்கள் இன்று மாலைக்குள் சென்னை வர உள்ளனர். அவர்கள் அனைவரும் கொரோனா சோதனைக்குப் பின்னர் பயோ பபுளில் வைக்கப்பட உள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments