Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகக்கோப்பை இறுதியில் தோனி முதலில் இறங்கியது ஏன்? இந்திய வீரர் பதில் !

உலகக்கோப்பை இறுதியில் தோனி முதலில் இறங்கியது ஏன்? இந்திய வீரர் பதில் !
, ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (09:58 IST)
2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் யுவ்ராஜுக்கு முன்னதாக தோனி இறங்கியது ஏன் என மற்றொரு இந்திய வீரரான சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இந்திய அணி 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்று 9 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்நிலையில் அதுகுறித்த செய்திகளைக் கிரிக்கெட் வீரர்கள் இப்போது பகிர்ந்துகொண்டு வருகின்றனர். 2011 ஆம் ஆண்டும் இறுதி போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 274 ரன்கள் குவித்தது. 275 என்ற இலக்குடன் இந்திய அணி களத்தில் இறங்கியது.  

சேவாக்கும், சச்சினும் சொற்ப ரன்களில் வெளியேற உலகக்கோப்பை கனவு தளர்ந்தது. ஆனால், காம்பீர், மற்றும் கோலி சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுக்க இந்தியா முன்னேறி சென்றது. ஒரு கட்டத்தில் கோலி அவுட் ஆக வழக்கமாக வரவேண்டிய யுவ்ராஜுக்குப் பதில் அன்று தோனி களத்துக்கு வந்தார். இது அப்போதும் இப்போதும் எப்போதும் சர்ச்சைக்குரிய ஒன்றாக ஆகியுள்ளது.

இந்நிலையில் யுவ்ராஜுக்கு முன்னதாக தோனி இறங்கியது ஏன் என்பது குறித்து சுரேஷ் ரெய்னா விளக்கமளித்துள்ளார். அதில் ‘இறுதிப் போட்டியின் போது தோனி கோலி அவுட் ஆனதும் தான் முதலில் செல்வதாக பயிற்சியாளரிடம் கூறினார். ஏனென்றால் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முரளிதரனை தன்னால் எதிர்கொள்ள முடியும் என அவர் கூறினார். இது எனக்குத் தெளிவாக நினைவிருக்கிறது’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய ஹாக்கி விளையாட்டு அமைப்பு மேலும் ரூ. 75 லட்சம் நிதி உதவி