இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து அசத்தியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன. இன்று நடைபெற்று வரும் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணிதான் தொடரை கைப்பற்ற முடியும். இந்நிலையில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதலில் தடுமாற்றத்தை சந்தித்தாலும் பிறகு நிதானித்து ஆடி வருகிறது. ஹிட்ஸ்மேன்களான ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வார்னரை குறைந்த ரன்களிலேயே இந்தியா அவுட் ஆக்கிவிட்டதால் ஆஸ்திரேலியாவின் ரன் ரேட் வழக்கத்தை விட குறைந்துள்ளது.
ஆனாலும் அதன் பின் ஜோடி சேர்ந்த ஸ்மித் மற்றும் லபுஷான் ஆகியோர் நிலைத்து நின்று ஆடி சரிவைத் தடுத்தனர். 54 ரன்கள் எடுத்து அவுட்டாகி வெளியேறினார் லபுஷான். ஆனாலும் தொடர்ந்து ஆடிய ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டிகளில் தனது 9 ஆவது சதத்தைப் பூர்த்தி செய்துள்ளார்.சிறப்பாக விளையாடிய அவர் 117 பந்துகளில் 100 ரன்களக் கடந்தார். அதில் 11 பவுண்டரிகள் அடங்கும்.
இரண்டாவது ஒருநாள் போட்டியில் 2 ரன்களில் அவர் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.