Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கதேசத்திற்கு எதிரான தொடரை வென்றது இலங்கை

Webdunia
திங்கள், 29 ஜூலை 2019 (07:08 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரை அடுத்து வங்கதேச அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கடந்த 26ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அந்தப் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது 
 
இந்த நிலையில் நேற்று இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 44.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 242 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இலங்கை அணியின் பெர்னாண்டோ 82 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடி ஆட்டநாயகன் விருதினை பெற்றார் 
 
இந்த வெற்றியை அடுத்து இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரை வென்றது.  இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 31ஆம் தேதி நடை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஸ்கோர் விபரம்:
 
வங்கதேசம்: 238/8
 
முசிபர் ரஹிம்: 98
ஹசன் மிர்ஸ்: 43
தமீம் இக்பால்: 19
 
இலங்கை: 242/3
 
ஃபெர்னாண்டோ: 82
மாத்யூஸ்: 52
மெண்டிஸ்: 41

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

இந்திய அணிக்குக் கேப்டன் ஆக ஆசைப்பட்டார் பண்ட்… டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர் பதில்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி… ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார் வீரர் விலகல்!

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments