Publish Date: Wed, 20 Sep 2017 (06:32 IST)
Updated Date: Wed, 20 Sep 2017 (06:34 IST)
சென்னையில் சமீபத்தில் நடந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 26 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வி காரணமாக அவரது கேப்டன் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
உலகின் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்று ஆஸ்திரேலிய அணி. ஸ்டீவ் வாஹ், ரிக்கி பாயிண்டிங், கிளார்க் ஆகியோர் அணியை வழிநடத்தியபோது தோல்வி என்பது எப்போதாவது தான் இந்த அணிக்கு கிடைத்தது.
ஆனால் ஸ்மித் கேப்டன் பதவியேற்றதில் இருந்து இலங்கைக்கு எதிரான தொடரை 0-3 என இழந்தது. வங்காள தேசத்திற்கு எதிரான தொடரை 1-1 என சமன் செய்தது. இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-2 என இழந்திருந்தது. தற்போது ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ளது.
இந்த நிலையில் இந்திய தொடர் முடிந்ததும் ஸ்மித் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.