Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி… நான்காவது போட்டியில் தோற்றாலும் இந்தியாவுக்கு வாய்ப்பு – எப்படி தெரியுமா?

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (15:42 IST)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. அதில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகள் முன்னணியில் இருந்தன. ஆனால் இந்தியாவுக்கு எதிரான தொடரை இழந்த ஆஸி பின்னடைவை சந்தித்தது.

இந்நிலையில் இப்போது இந்தியாவிடம் இரண்டு போட்டிகளை இங்கிலாந்து தோற்றதை அடுத்து அந்த அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. ஒருவேளை நான்காவது டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்றாலும் அது ஆஸி அணி இறுதிப் போட்டிக்கு செல்லவே வழிவகுக்கும் என சொல்லப்படுகிறது.

ஆனால் இப்போது ஆஸ்திரேலிய அணியும் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு மங்கியுள்ளது. தென் ஆப்பிரிக்க அணியுடனான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கொரோனாவைக் காரணம் காட்டி ரத்து செய்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். இதையடுத்து அதன் மீது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் புகார் அளித்துள்ளது. அதில் ஆஸி கிரிக்கெட் வாரியம் தங்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் ஆஸி அணிக்குப் புள்ளிகள் குறைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. ஒருவேளை இதை ஐசிசி செயல்படுத்தினால் நான்காவது போட்டியில் இந்தியா தோற்றால்கூட ஆஸியால் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியாது; இந்தியாதான் செல்லும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

கோலி நினைக்கும் வரை அவர் டெஸ்ட் விளையாட வேண்டும்… இல்லை என்றால் இந்தியாவுக்குதான் இழப்பு – ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

டெஸ்ட் அணியில் நீடிக்க விரும்பினால் இதை செய்யுங்கள்… கோலி & ரோஹித்துக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்!

மீண்டும் கேப்டன் ஆவார் கோலி?... முன்னாள் வீரரின் ஆருடம்!

மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக்.. !

அடுத்த கட்டுரையில்
Show comments