Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் விளையாடினால் கிரிக்கெட் மறந்துவிடும்… டேல் ஸ்டெய்ன் தாக்குதல்!

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (09:07 IST)
ஐபிஎல் தொடரில் விளையாடினால் கிரிக்கெட் மறந்துவிடும் என தென்னாப்பிரிக்கா முன்னாள் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மிகக்குறைந்த எகானமியில் அதிக விக்கெட் பந்துவீச்சாளர் என்றால் அது டேல் ஸ்டெயின்தான். அவரின் எகானமி 6.91 தான். ஆனால் கடந்த சில தொடர்களாக அவருக்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. மேலும் அவரும் சிறப்பாக பந்துவீசவில்லை. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இப்போது எஸ்பிஎல் மற்றும் பிசிஎல் ஆகிய தொடர்களில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியது ஏன் என அவர் கூறியுள்ளார். அதில் ‘ஐபிஎல் தொடரில் விளையாடினால் கிரிக்கெட் மறந்துபோகும். அங்கு எல்லோருமே இந்த ஆண்டு எவ்வளவு பணம் சம்பாதிப்போம் என்பது குறித்தே யோசிப்பார்கள். அதனால்தான் அதிலிருந்து விலகி கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தொடர்களில் விளையாட உள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா Under 19 அணியின் கேப்டன் ஆனார் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே.. சூர்யவம்சிக்கும் இடம்..!

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments