Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் மட்டுமல்ல, கிரிக்கெட் உலகமே கோஹ்லியை விரும்புகிறது – ஷேன் வார்ன் புகழாரம் !

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2019 (15:56 IST)
ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்ன் இந்தியக் கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லி பற்றிக் கேள்வி ஒன்றிற்குப் பதிலளிக்கையில் அவரைப் புகழ்ந்து பேசியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து ஜாம்பவானும் சர்ச்சைகளின் நாயகனுமான ஷேன் வார்ன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க விழாவில் கலந்துகொள்வதற்காக ராஜஸ்தான் வந்துள்ளார். விழாவிற்குப் பின் ராஜஸ்தான் அணியுடனும் ராஜஸ்தான் மக்களுடனுமானத் தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

அதன் பின்னர் ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த வார்ன், விராட் கோஹ்லி பற்றியக் கேள்வி ஒன்றிற்குப் ’நான் விராட் கோஹ்லியின் ரசிகன். அவர் விளையாடுவதைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். மேலும் அவரை எனக்கு தனிமனிதனாகவும் மிகவும் பிடிக்கும். அவர் தான் நம்புவதைப் பேசுகிறார். கோஹ்லி, ஆடுகளத்தில் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறார். அவர் மிகவும் நேர்மையாகக் கிரிக்கெட் விளையாடுகிறார். ஆட்டத்தின் முடிவை நோக்கி செல்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார். அதனால்தான் அவரால் இத்தனை சதங்களை அடிக்க முடிகிறது. அது வெறும் திறமை மட்டும் அல்ல. வேலையை சரியாக முடிக்க வேண்டுமென்கிற அவரது ஆசை. அதனால்தான் அவரை நான் மட்டுமல்ல மொத்த கிரிக்கெட் உலகமும் விரும்புகிறது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் அதில் கிங்… ஆனால் கில்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

தோனிதான் அந்த விஷயத்தில் மாஸ்டர்… ஷுப்மன் கில் அதைக் கற்றுக்கொள்ளலாம்- கேரி கிரிஸ்டன் அறிவுரை!

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் ஐந்து ஆஸி. பவுலர்கள்!

லீக் போட்டிகளில் விளையாட தேசிய அணியைக் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்… லாரா வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments