Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து நிருபரை விடாமல் துரத்தும் சேவாக்!

இங்கிலாந்து நிருபரை விடாமல் துரத்தும் சேவாக்!

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2016 (10:22 IST)
ரியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி ஒரு தங்கப்பதக்கம் கூட பெறவில்லை. ஆனால் பேட்மிண்டனில் சிந்து வெள்ளிப்பதக்கம் பெற்றதை தூக்கி வைத்து கொண்டாடுவதை இங்கிலாந்து நிருபர் மோர்கன் டுவிட்டரில் விமர்சித்திருந்தார்.


 
 
இதற்கு பதிலடி கொடுத்த கிரிக்கெட் வீரர் சேவாக், நாங்கள் சிறிய சந்தோஷங்களையும் கொண்டாடுகின்றோம். கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து ஏன் இதுவரை ஒரு உலகக்கோப்பையை கூட வெல்லவில்லை என அதிரடியாக கூறினார்.
 
இதற்கு பதில் அளித்த அந்த நிருபர், நாங்கள் அடுத்த உலகக்கோப்பையை வெல்லுவோம் அதற்குள் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்லுங்கள் என கூறினார். இதற்கும் பதில் அளித்த சேவாக் நாங்கள் ஏற்கனவே ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றுவிட்டோம், நீங்கள் தான் இதுவரை உலகக்கோப்பையை வெல்லவில்லை. முதலில் உலகக்கோப்பையை வென்றுகாட்டுங்கள் என்றார்.
 
இந்நிலையில் தற்போது ரியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தின் மாரியப்பன் தங்கப்பதக்கம் வென்றதற்கு அவரது தாயாருக்கு சேவாக் வாழ்த்துக்கள் கூறினார்.
 
அதுபோல அந்த இங்கிலாந்து நிருபர் மோர்கனும் மாரியப்பனின் தாயாருக்கு வாழ்த்து தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த சேவாக் மீண்டும் அந்த நிருபரை விளாசியுள்ளார். வாழ்த்துக்கள் எல்லாம் போதும் முதலில் நீங்கள் கிரிக்கெட்டில் உலக கோப்பையை வெல்ல பாருங்கள் என பதிலடி கொடுத்தார் சேவாக்.

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments