Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் வெற்றிக்குப் பின் சி எஸ் கேவுக்கு மகிழ்ச்சி செய்தி!

#CoronaVirus
Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (12:34 IST)
சி எஸ் கே அணியின் ருத்துராஜ் கெய்க்வாட் கொரோனாவில் இருந்து குணமாகி மீண்டும் அணியினரோடு பயிற்சியில் இணைய உள்ளார்.

2020 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கின. முன்னதால துபாய்க்கு சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உதவி பணியாளர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதில் சிஎஸ்கே பந்து வீச்சாளரான தீபக் சஹார் மற்றும் பேட்ஸ்மென் ருத்துராஜ் கெய்க்வாட் ஆகிய வீரர்களும் அடக்கம். இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டனர்.

இதையடுத்து அடுத்தடுத்த நடத்தப்பட்ட இரண்டு சோதனைகளிலும் தீபக் சஹாருக்கு கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்ததால் அவர் அணியினரோடு சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் கெய்க்வாட்டுக்கோ இரண்டாவது சோதனையில் மீண்டும் கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளதால், அவர் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ருத்துராஜ் இப்போது முழுமையாக குணமாகியுள்ள நிலையில் அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடவுள்ளார். ருத்துராஜின் வருகை சி எஸ் கேவின் பேட்டிங்கை மேலும் பலப்படுத்தும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு முதல் பேட்டிங்.. குஜராத் அணிக்கு எதிராக விராத் கோஹ்லி சதமடிப்பாரா?

ஹாட்ரிக் வெற்றியை தொடுமா ஆர்சிபி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! - இன்று RCB vs GT மோதல்!

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments