Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்க்கு நிதி உதவி செய்யும் ரொனால்டோ

Webdunia
புதன், 8 பிப்ரவரி 2023 (23:09 IST)
துருக்கி மற்றும் சிறிய ஆகிய இரண்டு நாடுகளில் அடுத்தடுத்து பலமுறை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகின.
 

இந்தக் இடிபாடுகளுக்குள் சிக்கி இதுவரை 9 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும்,  இன்னும்  மீட்பு பணிகள் நடைபெற இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது
 
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து துருக்கி நாட்டில் மீட்புப் படைகள் சென்றுள்ள நிலையில்  இடிபாடுகளில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ள மக்களை  மீட்கும் பணிகளில் மீட்புப் படைகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து துருக்கிக்கு பல்வேறு உதவிகள் குவிந்து வருகின்றன.

அதேபோல், கால்பந்து விளையாட்டு நட்சத்திரங்களும்  அங்குள்ள மக்களுக்கு உதவிகள் செய்து வருகின்றன.

மேலும், போர்ச்சுகள் நாட்டைச் சேர்ந்த கால்பந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தன் ஜெர்சியை ஏலத்திற்கு வழங்கியுள்ளதாக துருக்கி கால்பந்து வீரர் மெரிஹ் டெமிரல் சமூக வலைதளத்தில் கூறியுள்ளார்.

இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் பணம் துருக்கியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கவுள்ளதாக ரொனால்டோ கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்..

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

அடுத்த கட்டுரையில்
Show comments