துருக்கி மற்றும் சிறிய ஆகிய இரண்டு நாடுகளில் அடுத்தடுத்து பலமுறை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகின.
இந்தக் இடிபாடுகளுக்குள் சிக்கி இதுவரை 9,500 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இன்னும் மீட்பு பணிகள் நடைபெற இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
உலகையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்த நில நடுக்கத்தில், கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தில் இடிந்து விழுந்த கட்டிய இடிபாடுகளுக்கு அடியில் ஒரு சிறுமி தன் தம்பியுடன் சிக்கியபடி மீட்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.
தன் தம்பியைப் பாதுகாத்தபடி சுமார் 17 மணி நேரம் அச்சிறுமி அதில் இருந்துள்ளார்
தன் தம்பியை அன்னைப் போல் பாதுகாத்த சிறுமியின் செயலுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த வீடியோ வைரலாகி வருகிறது.