Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஓவரில் 6 சிக்ஸர் அடிக்க திட்டம் – ரோகித் ஷர்மா பேட்டி!

Webdunia
சனி, 9 நவம்பர் 2019 (09:01 IST)
நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தியா – வங்கதேச ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

முதல் டி20 ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசத்திடம் தோல்வியுற்றதை தொடர்ந்து இரண்டாவது ஆட்டத்தில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் புதிய கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம்  நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் வங்கதேசம் நிர்ணயித்த 154 ரன்கள் இலக்கை இந்தியா 15.4 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது.

ரோகித் ஷர்மா 6 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் விளாசி 85 ரன்கள் பெற்று ஆட்டநாயகன் விருதை வென்றார். மேலும் ஒரு ஓவரில் தொடர்ந்து மூன்று சிக்ஸர்கள் விளாசியது ரசிகர்களால் வெகுவாக சிலாகிக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு பேட்டியில் பேசிய ரோகித் ஷர்மா பேசுகையில் “சிக்ஸர் அடிப்பது பெரிய விஷயம் கிடையாது. பந்தின் வேகத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். பந்து மட்டையின் நடுப்பகுதியில் படும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். உடலையும், தலையையும் சரியான திசையில் வைத்து கொள்ள வேண்டும். இதெல்லாம் சரியாக அமைந்தால் நீங்கள் கூட சிக்ஸர் அடிக்கலாம்” என்று கூறியுள்ளார்.

மேலும் “நான் ஒரு ஓவரில் தொடர்ந்து மூன்று சிக்ஸர்கள் அடித்தபோது மீத 3 பால்களிலும் சிக்ஸர் அடித்து விட முயற்சித்தேன். 4 வது பந்து நழுவியதும் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்” என்று கூறியுள்ளார்.

முன்பொரு சமயத்தில் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்கள் விளாசியதே தற்போது வரை மிகப்பெரும் சாதனையாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி தரவரிசையில் முதலிடம்… அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கான அணி அறிவிப்பு.. ஆஸி அணியில் இரண்டு மாற்றங்கள்!

மீண்டும் தொடக்க வீரராக ரோஹித்… கில் இடத்தில் ராகுல்… அதிரடி முடிவு!

நான் இந்திய அணிக்குக் கேப்டனாகவில்லை என்று வருத்தமில்லை… அஸ்வின் கருத்து!

அஸ்வினுக்குப் பதில் அணியில் தனுஷ் கோட்டியான் சேர்க்கப்பட்டது ஏன்?... ரோஹித் ஷர்மா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments