Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஒரு வெற்றிதான்! பரிதாபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

Webdunia
வெள்ளி, 8 நவம்பர் 2019 (22:50 IST)
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உலகின் முன்னணி அணிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போதும் அதற்கு பின்னரும் படு மோசமாக விளையாடி வருவதால் அந்த அணி தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது 
 
இந்த நிலையில் இந்த ஆண்டு டி20 போட்டியை பொருத்தவரை பாகிஸ்தான் அணி இதுவரை ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றியை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த ஆண்டு பாகிஸ்தான் மொத்தம் 10 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. இவற்றில் 8 போட்டிகளில் தோல்வியும் ஒரு வெற்றியும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஒரு போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.  
 
இதே பாகிஸ்தான் அணி கடந்த 2017-ம் ஆண்டு 10 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றியும், 2018 ஆம் ஆண்டில் 19 போட்டிகளில் விளையாடி 17 போட்டிகளில் வெற்றியும் பெற்று சிறந்த அணியாக விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததோடு தொடரையும் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments