Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதனையை தவற விட்ட கோஹ்லி; சாதனைப் படைத்த ரோஹித்-தவான்

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2018 (15:40 IST)
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடந்து வரும் நான்காவது ஒருநாள் போட்டியில் ரோஹித் ஷர்மா-தவான் ஜோடி சாதனைப் படைத்துள்ளது.

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டி இன்று மும்பையில் நடைபெற்று வருகிறது. அதில் ரோஹித் ஷர்மா- தவான் ஜோடி ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இந்த ஜோடி இன்று ஐந்து ரன்களைக் கடந்த போது தொடக்க ஆட்டக்காரர்களாக சச்சின்,ஷேவாக் மற்றும் ஆம்லா மற்றும் டீகாக் ஜோடி சேர்த்த 3919 ரன்களை முந்தி நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த ஜோடிக்கு முன்னால் வெஸ் இண்டீஸின் கிரீனிட்ஜ், ஹேய்ன்ஸ் ஜோடி (3986), ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட்,ஹெய்டன் ஜோடி (5372) மற்றும் இந்தியாவின் சச்சின், கங்குல் ஜோடி (6609) முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

இந்த போட்டியில் தொடர்ந்து நான்காவது முறையாக சதமடித்து சங்ககராவின் சாதனையை சமன் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட கோஹ்லி 16 ரன்களில் அவுட் ஆகி அந்த சாதனையைத் தவறவிட்டார்.

தற்போதைய் நிலவரப்படி இந்தியா 28 ஓவர்களில் 160 ரன்கள் குவித்து 2 விக்கெட்களை இழந்துள்ளது. ரோஹித் ஷர்மா 79 ரன்களுடனும் அம்பாத்தி ராயுடு 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுப்மன் கில் அபார இரட்டை சதம்.. இந்திய பவுலர்கள் அசத்தல்.. இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் ஸ்கோர் விபரம்..!

ஜடேஜா அவுட்.. இரட்டை சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. 2வது டெஸ்ட்டின் ஸ்கோர் விபரம்..!

பாகிஸ்தான் அணி இந்தியா வந்து விளையாட மத்திய அரசு அனுமதி.. 3 துறைகள் அளித்த ஒப்புதல்..!

இன்னும் 18 ரன்கள் தான்.. சுப்மன் கில் நிகழ்த்த இருக்கும் சாதனை.. ஜடேஜா அதிவேக அரைசதம்..!

குறுக்க இந்த கௌஷிக் வந்தா… இலங்கை- வங்கதேசம் போட்டிக்கு நடுவே வந்த பாம்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments