மும்பை சித்தி விநாயகர் கோவிலில் உலகக்கோப்பை.. ரோஹித் சர்மா, ஜெய்ஷா சாமி தரிசனம்..!

Siva
வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (07:37 IST)
சமீபத்தில் உலக கோப்பை டி20 இறுதிப் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்ற நிலையில் இந்தியாவுக்கு வாழ்த்துகள் குவிந்தது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் உலகக் கோப்பையுடன் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ரோகித் சர்மா, பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா உள்பட கிரிக்கெட் பிரபலங்கள் மும்பை சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, மும்பை சித்தி விநாயகர் கோவிலில் உலகக்கோப்பையுடன் தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ரோகித் சர்மா தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2007 ஆம் ஆண்டு பிறகு 17 ஆண்டுகள் கழித்து டி20 உலக கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மும்பையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கே அணிக்கு நஷ்டத்தை உண்டாக்கினாரா அஸ்வின்.. வழக்கம் போல் நகைச்சுவையுடன் பதிலடி..!

நேற்று 25 கோடி ரூபாய் சம்பாதித்த ஹீரோ.. இன்று ஜீரோ.. கேமரூன் க்ரீன் பரிதாபம்..!

18 கோடி ரூபாய்க்கு மதீஷா பதிரானா ஏலம்.. ஏலம் எடுத்த அணி எது?

விராட் கோலி-அனுஷ்கா சர்மா தம்பதிக்கு சாமியார் வழங்கிய அறிவுரை.. வைரல் காணொளி..!

2025 ஐபிஎல் மினி ஏலம்.. எந்தெந்த அணிகள் யார் யாரை ஏலம் எடுத்தன.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments