Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பையை வெல்லப் போவது யார் – உலகக் கோப்பை நாயகன் பதில் !

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2019 (09:36 IST)
இன்னும் இரண்டு மாதங்களில் நடக்க இருக்கும் உலகக்கோப்பைப் போட்டித்தொடரில் வெல்ல எந்த அணிகளுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது என ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.

மூன்று உலகக்கோப்பைப் போட்டிகளில் (2003,2007,2011) ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தியவரும், அதில் இரண்டு உலக்கோப்பைகளில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வெல்லக் காரணமாக இருந்தவருமான ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கிப் பாண்டிங் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு உதவிப் பயிற்சியாளராக உள்ளார்.

நேற்று மெல்போர்னில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’உலகக் கோப்பைத் தொடரை வெல்வதற்கு இந்த முறை இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. அது போலவே இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளும் நல்ல ஃபார்ம்மில் உள்ளன. நான் ஆஸ்திரேலிய அணிக்குப் பயிற்சியாளராக உள்ளதால் இதை சொல்லவில்லை. இங்கிலாந்து நாட்டில் நிலவும் தட்பவெப்ப நிலைகள் ஆஸ்திரேலியாவின் தட்பவெப்ப நிலைக்கு நன்றாக ஒத்துப்போகும். அதனால் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சொந்த நாட்டில் விளையாடுவது போன்றே இருக்கும். மேலும் சிறந்த வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் அணிக்குத் திரும்புவது கூடுதல் பலத்தை அளிக்கும்’ என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்று நடப்புச் சாம்பியனாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நான் ஒன்றும் பாலிவுட் நடிகர் இல்லை… விமர்சனம் குறித்து கம்பீர் விளக்கம்!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இரண்டு குறைகள் உள்ளன… முன்னாள் வீரர் விமர்சனம்!

இவ்ளோ நாள் சொதப்புனது எல்லாம் வெறும் நடிப்பா?... முக்கியமான போட்டியில் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்ற ஸ்டார்க்!

தவறுகளை விரைவாக சரிசெய்வோம்… தோல்விக்குப் பின்னர் பேசிய பேட் கம்மின்ஸ்!

நான்காவது முறையாக ஐபிஎல் பைனலில் கொல்கத்தா… கம்பீர் வந்த ராசிதான் போல!

அடுத்த கட்டுரையில்
Show comments