Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யார் பயிற்சியாளர்? ஒரு வழியா முடிவு செய்த பிசிசிஐ!

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2017 (22:04 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் யார் என்பதில் கடந்த சில மணி நேரங்களாக குழப்பநிலை இருந்த நிலையில் தற்போது ரவிசாஸ்திரிதான் பயிற்சியாளர் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டனர்.



 
 
இன்று மாலை 6 மணி அளவில் ரவிசாஸ்திரி பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டதாக
கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானது. ஆனால் ஒருசில நிமிடங்களில் இல்லை, அவர் பயிற்சியாளர் இல்லை, இன்னும் பயிற்சியாளரை முடிவு செய்யவில்லை என  பிசிசிஐ செயலாளர் அமிதாப் சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறினார்.
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் ரவிசாஸ்திரிதான் பயிற்சியாளர் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தற்காலிக தலைவர் சி.கே.கண்ணா இந்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டார். 
 
மேலும் இந்திய அணியின் பந்துவிச்சுப் பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவர்கள் இருவரும் வரும் 2019ம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை தொடர் வரை பதவி இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

வயதை குறைத்து சொல்லி ஏமாற்றினாரா வைபவ் சூர்யவன்ஷி?... தந்தை ஆவேசம்!

ஆஸ்திரேலியா தொடருக்கு நடுவே திடீரென இந்தியா திரும்பிய கம்பீர்!

ஐபிஎல் ஏலம்: வீரர்கள் தேர்வில் வித்தியாசம் காட்டிய சிஎஸ்கே - அணியை ஆட்டிப்படைக்கும் மிகப்பெரிய குறை!

அடுத்த கட்டுரையில்
Show comments