Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயிற்சியாளர் ரவி சாஸ்திரி என்ற அறிவிப்புக்கு மறுப்பு தெரிவித்துள்ள பிசிசிஐ

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2017 (18:53 IST)
இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம் என்ற அறிவிப்புக்கு பிசிசிஐ செயலாளர் அமிதாப் சவுதரி மறுப்பு தெரிவித்துள்ளார்.


 

 
இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தேர்வு நடைப்பெற்றது. ரவி சாஸ்திரி அல்லது சேவாக் இரண்டில் யாராவது ஒருவர் பயிற்சியாளராக வாய்ப்பு உள்ளது என்று எண்ணப்பட்ட நிலையில் தேர்வு குழுவில் ஒருவரான கங்குலி, கேப்டன் கோலியுடன் கலந்து ஆலோசித்து பயிற்சியாளரை அறிவிப்போம் என்றார். 
 
தற்போது சில மணி நேரங்களுக்கு முன் திடீரென இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி என்று ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த செயலாளர் அமிதாப் சவுதரி இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
தற்பொது வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. கிரிக்கெட் ஆலோசனை குழு இன்னும் பயிற்சியாளர் யார் என்பது குறித்த முடிவுக்கு வரவில்லை. பயிற்சியாளர் நியமிக்கப்பட்டது என்பது குறித்த செய்திகள் வெளியானதில் உண்மை இல்லை. கிரிக்கெட் ஆலோசனை குழு அடுத்த திங்கட்கிழமை வரை பயிற்சியாளர் யார் என்று தேர்வு செய்தை நிறுத்தி வைத்துள்ளனர்.

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments