Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஞ்சி கோப்பை. அரையிறுதியில் போராடி தமிழ்நாடு அணி தோல்வி.. மும்பை அபார வெற்றி.!

Mahendran
திங்கள், 4 மார்ச் 2024 (16:41 IST)
கடந்த சில மாதங்களாக ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்ற நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழ்நாடு அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றதை அடுத்து இந்த தொடரின் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 
 
ஆனால் சற்றுமுன் முடிவடைந்த இந்த போட்டியில் தமிழ்நாடு அணி மும்பை அணியிடம் தோல்வி அடைந்ததை அடுத்து ரஞ்சி கோப்பை கனவு நனவாகாமல் இருப்பது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த போட்டியில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 146 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 162 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 378 ரன்கள் எடுத்தது 
 
இதனை அடுத்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபாரமாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது 
 
இந்த நிலையில் மற்றொரு அறையிறுதி போட்டியான விதர்பா மற்றும் மத்திய பிரதேச அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் இந்த போட்டியில் வெல்லும் அணி இறுதி போட்டியில் மும்பை அணியுடன் மோதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா விளையாடும் போட்டிகளுக்கான மைதானம் இதுதான்!

ஸ்மிருதி மந்தனா அபார பேட்டிங்.. 211 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் மகளிர் அணி தோல்வி..!

களத்தில் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.. கோலி குறித்து சஞ்சய் பாங்கர் கருத்து!

பயிற்சியின் போது இடது காலில் காயமான ரோஹித் ஷர்மா… வைரலான புகைப்படம்!

பயிற்சியின் போது காயமடைந்த முன்னணி வீரர்… இந்திய அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments