டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்… ஜாம்பவான் பவுலரை முந்திய நாதன் லயன்!

vinoth
திங்கள், 4 மார்ச் 2024 (14:13 IST)
ஆஸ்திரேலிய அணியின் சுழல்பந்து வீச்சாளரான நாதன் லயன் தற்போது கிரிக்கெட் விளையாடும் சுழல்பந்து வீச்சாளர்களில் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருக்கிறார். சமீபத்தில் அவர் 100 டெஸ்ட் போட்டிகளை விளையாடி மைல்கல்லை எட்டினார்.

தற்போது நியுசிலாந்து அணிக்கெதிராக நடந்து வரும் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் நியுசிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்கள் வீழ்த்திய முதல் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

மேலும் அவர் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பவுலர்கள் வரிசையில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கோர்ட்னி வால்ஷை முந்தி ஏழாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்களோடு முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் அணிக்கு தடை விதிக்கிறாதா ஐசிசி? இன்று ஆலோசனை..!

பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வு முடிவு போல் தான் இதுவும்.. சுனில் கவாஸ்கர் கிண்டல்..!

இந்தியா - பாகிஸ்தான் ஃபைனல் வந்தாலும் போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்குமா? கெவின் பீட்டர்சன் கேள்வி

இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறவில்லை என்றால் ரூ.4500 கோடி இழப்பு: ஐசிசி நடவடிக்கை என்ன?

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம்: பாகிஸ்தான்

அடுத்த கட்டுரையில்
Show comments