Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்வுக்குழுவில் எங்களுக்கு பெரிய தலைவலி காத்திருக்கிறது… டிராவிட் கருத்து!

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (16:02 IST)
இந்திய டெஸ்ட் அணிக்கான தேர்வுக்குழுவில் தங்களுக்கு நல்ல தலைவலி காத்திருப்பதாக அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், அக்ஸ்ர் படேல், ஷுப்மன் கில் மற்றும் மயங்க் அகர்வால் என இளம் வீரர்கள் கலக்கிக் கொண்டு வருகின்றனர். ஆனால் மூத்த வீரர்களான ரஹானே, புஜாரா மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோரின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. இதனால் மூத்த வீரர்கள் அடுத்து வரும் தென்னாப்பிரிக்கா தொடருக்குக் கழட்டி விடப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அணித் தேர்வு குறித்து பேசுகையில் ‘அணித் தேர்வு என்று வரும்போது எங்களுக்கு மிகப்பெரிய தலைவலி காத்திருக்கிறது. இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். மேலும் அவர்களுக்குள் போட்டி இருக்கிறது.இதனால் சில கடினமான முடிவுகள் எடுக்கப்படலாம். வீரர்கள் ஏன் நீக்கப்படுகிறார்கள் என்ற தகவல் தொடர்பு எங்களிடம் இருக்கும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கான அணி அறிவிப்பு.. ஆஸி அணியில் இரண்டு மாற்றங்கள்!

மீண்டும் தொடக்க வீரராக ரோஹித்… கில் இடத்தில் ராகுல்… அதிரடி முடிவு!

நான் இந்திய அணிக்குக் கேப்டனாகவில்லை என்று வருத்தமில்லை… அஸ்வின் கருத்து!

அஸ்வினுக்குப் பதில் அணியில் தனுஷ் கோட்டியான் சேர்க்கப்பட்டது ஏன்?... ரோஹித் ஷர்மா பதில்!

மூளையில் ரத்த உறைவு… மோசமான நிலையில் வினோத் காம்ப்ளியின் உடல்நிலை- மருத்துவர் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments