Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைகொடுத்த ரஹானே பேட்டிங்: இந்தியா ஸ்கோர் 200ஐ தாண்டியது!

Webdunia
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (07:37 IST)
மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், 93 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்களையும் இழந்து தத்தளித்து வந்தது.
 
 
இதனையடுத்து ரஹானே மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் பொறுப்புடன் விளையாடியதால் இந்திய அணியின் ஸ்கோர் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 68.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 203 ரன்கள் எடுத்தது. ரஹானே அபாரமாக விளையாடி 81 ரன்களும், கே.எல்.ராகுல் 44 ரன்களும் எடுத்தனர். விஹாரி 32 ரன்கள் எடுத்தார். தற்போது ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா களத்தில் உள்ளனர். இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 300ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
 
மே.இ.தீவுகளின் ரோச் மிக அபாரமாக பந்துவீசி 17 ஓவர்களில் 34 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். கேப்ரியல் 2 விக்கெட்டுக்களையும், சேஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி இன்றிரவு 7 மணிக்கு தொடங்கும்

தொடர்புடைய செய்திகள்

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

அடுத்த கட்டுரையில்
Show comments