Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளிக்கு நான் கேரண்டி: பிவி சிந்து

Webdunia
திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (17:41 IST)
ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இந்த போட்டிகளுக்கு சாய்னா மற்றும் பிவி சிந்து தகுதி பெற்றிருந்தனர். 
 
அரையிறுதி ஆட்டத்தில் சாய்னா நேவால் தோல்வி அடைந்து, வெண்கல பதக்கத்தோடு வெளியேறினார். இதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில், பிவி சிந்து, ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியை எதிர்கொண்டார். 
 
பிவி சிந்து, முதல் செட்டைகைப்பற்றினார். அகானே யமகுச்சி 2 வது செட்டை கைப்பற்றினார். மூன்றவாது செட்டை கைப்பாற்றி சிந்து அசத்தினார். இதன் மூலம் 21-17, 15-21, 21-10 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பிவி சிந்து. 
 
இதன் மூலம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார் சிந்து. நாளைய ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டால் தங்க பதக்கம் கிடைக்க கூடும். இதற்கு முன்னர் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியிலும் சிந்து இறுதி போட்டிக்கு சென்று தங்க பதக்கத்தை நழுவவிட்டது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

ரோஹித் ஷர்மாவின் மகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நக்கல் செய்த ஷுப்மன் கில்!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

யூரோ கால்பந்து போட்டி.. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஜெர்மனி.. பெரும் சாதனை..!

ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து ஆடிய ஸ்காட்லாந்து 180 ரன்கள் சேர்ப்பு… ஆஸி தோற்றால் இங்கிலாந்து வெளியே!

அடுத்த கட்டுரையில்
Show comments