Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாரா ஒலிம்பிக்ஸில் இரண்டு வெண்கலம் வென்ற ப்ரீத்தி பால்! - குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து!

Preethi Sharma

Prasanth Karthick

, திங்கள், 2 செப்டம்பர் 2024 (08:34 IST)

பாரிஸில் நடைபெற்று வரும் மாற்று திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்ஸில் இந்திய வீராங்கனை ப்ரீத்தி பால் இரண்டு வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார்.

 

 

பெண்களுக்கான 100 மீட்டர் டி35 போட்டியில் கலந்து கொண்ட ப்ரீத்தி பால் தனது முதல் வெண்கல பதக்கத்தை வென்றிருந்தார். அதை தொடர்ந்து நேற்று நடைபெற்ற 200 மீட்டர் டி35 போட்டியில் போட்டியிட்டு இரண்டாவது வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளார். ப்ரீத்தி பாலுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்டோரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

 

ப்ரீத்தியை வாழ்த்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி “பாராலிம்பிக்ஸ் 2024 இன் அதே பதிப்பில் பெண்களுக்கான 200மீ டி35 போட்டியில் வெண்கலத்துடன் இரண்டாவது பதக்கத்தை வென்றதன் மூலம், ப்ரீத்தி பால் ஒரு வரலாற்று சாதனை படைத்துள்ளார். அவர் இந்திய மக்களுக்கு ஒரு உத்வேகம். அவளுடைய அர்ப்பணிப்பு உண்மையிலேயே குறிப்பிடத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.

 

webdunia
 

திரௌபதி முர்மு “பாரிஸ் பாராலிம்பிக்ஸ் மகளிர் 200 மீ - டி35 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ப்ரீத்தி பாலுக்கு வாழ்த்துகள். அவரது 100 மீட்டர் வெண்கலத்திற்குப் பிறகு, இது பாரிஸ் பாராலிம்பிக்ஸில் அவரது இரண்டாவது பதக்கம், இது ஒரு விதிவிலக்கான சாதனையாகும். இந்தியாவுக்கான இரண்டு பாரா தடகளப் பதக்கங்களையும் அவர் வென்றுள்ளார். அவளை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது. மூவர்ணக் கொடியில் அணிந்திருக்கும் அவரது வெற்றி படங்கள் விளையாட்டு பிரியர்களை மின்னச் செய்தன. அவர் இளைஞர்களிடையே விளையாட்டு கலாச்சாரத்தை வலுப்படுத்தி, இந்தியாவுக்கு அதிக பெருமையை சேர்ப்பார்” என வாழ்த்தியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விறுவிறுப்பாக நடந்த ஃபார்முலா ரேஸ் பந்தயம்! உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!