Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனத்த இதயத்துடன் சிஎஸ்கே அணியில் இருந்து விலகுகிறேன்: பத்திரனா அதிர்ச்சி அறிவிப்பு..!

Siva
செவ்வாய், 7 மே 2024 (07:32 IST)
சென்னை அணியில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியே இருக்கிறேன் பத்திரனா  அதிர்வு அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய பந்துவீச்சாளராக இருக்கும் பத்திரனா இலங்கை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பத்திரனா தொடையில் காயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் சிகிச்சைக்காக இலங்கை செல்கிறார் என்றும் அதனால் அவர் சென்னை அணியில் நடப்பு  ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்றும் கூறப்படுகிறது.
 
நடப்பு ஐபிஎல் தொடரில்  இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை எடுத்த நிலையில் இனிவரும் போட்டிகளிலும் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அவர் அணியில் இருந்து விலகுவது சென்னை அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் இது குறித்து பத்திரனா  கூறுகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2024 ஆம் ஆண்டு கோப்பையை பெற வேண்டும் என்ற ஆசையில் கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன், சென்னையில் இருந்து கிடைத்த அன்பிற்கும் ஆசீர்வாதத்திற்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா எங்களுக்கு அதிகமாக வேலை வைக்கிறார்… ஆஸி கேப்டன் பாராட்டு!

கோலி, ரோஹித் ஷர்மா எப்போது ஓய்வு?... ரவி சாஸ்திரி கருத்து!

கிங் இறந்துவிட்டார்.. புதிய கிங் பொறுப்பேற்றுக் கொண்டார் – கோலி குறித்து தடாலடி கருத்தை சொன்ன முன்னாள் வீரர்!

ஒரு ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்கள்… சச்சின், கவாஸ்கர் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்!

என்னுடைய பேட்டிங் திருப்தி அளிக்கவில்லை… போட்டிக்குப் பின்னர் ரோஹித் ஷர்மா கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments