100வது போட்டியில் 100 ரன்கள் அடித்த ஜாஸ் பட்லர்.. நான்கிலும் வென்று ராஜஸ்தான் முதலிடம்..!
, ஞாயிறு, 7 ஏப்ரல் 2024 (06:54 IST)
100வது போட்டியில் 100 ரன்கள் அடித்த ஜாஸ் பட்லர் .. நான்கிலும் வென்று ராஜஸ்தான் முதலிடம்..!
ராஜஸ்தான் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர் நேற்று நூறாவது ஐபிஎல் போட்டியை விளையாடிய நிலையில் அந்த போட்டியில் 100 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். மேலும் நேற்று பெங்களூர் அணியை ராஜஸ்தான் தோல்வி அடைய செய்த நிலையில் விளையாடிய நான்கு போட்டிகளிலும் வென்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடர் போட்டியில் நேற்று ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் விராட் கோலியின் அபார சதம் காரணமாக பெங்களூர் அணி 20 ஓவர்களில் 183 ரன்கள் எடுத்தது. 184 ரன்கள் என்ற நிலையில் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி ஜாஸ் பட்லர் அபார சதம் காரணமாக 19.1 ஓவரில் 189 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியில் வெற்றி பெற ஒரே ஒரு ரன் மட்டும் இருந்த நிலையில் 94 ரன்கள் அடித்திருந்த ஜாஸ் பட்லர் ஒரு சிக்ஸர் அடித்ததால் அவர் செஞ்சூரி அடித்தார் என்பதும் அணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பேட் கம்மிங் நூறாவது ஐபிஎல் போட்டியை விளையாடிய நிலையில் அந்த போட்டியில் அவர் 100 ரன்கள் அடித்ததை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
இந்த நிலையில் ராஜஸ்தான் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் 8 புள்ளிகள் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் கொல்கத்தா, மூன்றாவது இடத்தில் சென்னை மற்றும் நான்காவது இடத்தில் லக்னோ அணிகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி, லக்னோ மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் போட்டி, ஜாஸ் பட்லர், சதம்,
Edited by Siva
அடுத்த கட்டுரையில்