Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை!

vinoth
செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (09:28 IST)
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பிரான்ஸில் கோலாகலமாக நடந்து முடிந்தது. அதை தொடர்ந்து மாற்று திறனாளிகளுக்கான பாராஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் தொடங்கியுள்ளது. செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டிகளில் 184 நாடுகளை சேர்ந்த 4,400 மாற்றுத் திறனாளி வீர, வீராங்கனைகள் போட்டியிடுகின்றனர்.

இந்த போட்டிகளில் இந்தியா சார்பில் 32 பெண் வீராங்கனைகள் உட்பட 84 பேர் கலந்து கொள்கிறார்கள். கடந்த வாரம் இந்த போட்டிகள் தொடங்கிய நிலையில் தற்போது தமிழக வீராங்கனை நிதயஸ்ரீ சிவன் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

பேட்மிண்ட்டன் வீராங்கனையான நித்யஸ்ரீ இந்தோனேஷியா வீராங்கனையான ரினா மர்லினாவை 21-14, 21-16 ஆகிய செட் கணக்குகளில் வென்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். ஏற்கனவே தமிழக வீராங்கனைகளான துளசிமதி மற்றும் மனிஷா ஆகியோர் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டாவது டெஸ்ட்டில் கோலி விளையாடுவாரா?... புகைப்படம் வெளியிட்டு அப்டேட் கொடுத்த பிசிசிஐ!

ராகுல் பற்றி எல்லோரும் பேசி இருக்கணும்.. ஆனால்? – ஆஸி வீரர் கருத்து!

தோனியிடம் பேசியே பத்து ஆண்டுகள் ஆகிறது… ஹர்பஜன் சிங் பகிர்ந்த தகவல்!

பிரித்வி ஷாவின் நெருங்கிய நண்பர்கள் இதைதான் செய்யவேண்டும்… கெவின் பீட்டர்சன் அறிவுரை!

காலில் கட்டுடன் காணப்பட்ட கோலி… பயிற்சியின் போது காயமா?

அடுத்த கட்டுரையில்
Show comments