Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது திருமணத்தை ரகசியமாக முடித்த 65 வயது கிரிக்கெட் வீரர்??

Webdunia
சனி, 6 ஜனவரி 2018 (17:53 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான இம்ரான்கான் 3வதாக ஒரு பெண்ணை ரகசிய திருமணம் செய்துக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்ரான் கானுக்கு 65 வயதாவது குறிப்பிடத்தக்கது. 
 
பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் இம்ரான் கான் மூன்றாவது திருமணம் செய்துக்கொண்டுள்ளாராம். இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த ஜெமிமாவை திருமணம் செய்துக்கொண்டார். 
 
இதுவே அவரது முதல் திருமணம். இந்த தம்பதியினருக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில் 2004-ல் ஒருவரும் பிரிந்து விட்டனர். இதன் பிறகு ரேஹம் என்ற டிவி பத்திரிக்கையாளரை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார். 
 
இவர்களது திருமணம் இம்ரான் கானின் பண்ணை வீட்டில் நடைபெற்றது. ரேஹமும் ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவர் விவாகரத்து பெற்று கணவரை பிரிந்தவர்.
 
இந்நிலையில் தற்போது, இம்ரான் ஆன்மிக வழிகாட்டலுக்கு வருகை தந்த ஒரு பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களது திருமணம் புத்தாண்டு நாளன்று ரகசியமாக நடைபெற்றதாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் மூன்று வருடங்கள் எனக்கு RCB ல் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை… கோலி ஓபன் டாக்!

அடக்கொடுமையே.. எப்டி இருந்த மனுஷன்!? ஸ்டேடியத்தில் சமோசா விற்கும் சாம் கரண்? - வைரலாகும் வீடியோ!

‘பிரித்வி ஷா மாதிரி அழப் போகிறாய்’… ஜெய்ஸ்வாலை எச்சரிக்கும் முன்னாள் பாக் வீரர்!

ஸ்டார்க் போட்டா ஆப்பு.. விராட் அடிச்சா டாப்பு? இன்று பலபரீட்சை செய்யும் RCB vs DC! முதலிடம் யாருக்கு?

யாருக்கு ஆட்டநாயகன் விருது கொடுப்பது என்பதில் குழப்பம் வரும்… தன் அணி குறித்து பெருமிதப்பட்ட கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments