Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ள வந்துட்டோம்.. இனி கோப்பையோடதான் போவோம்! – பாகிஸ்தான் பயிற்சியாளர்!

Webdunia
செவ்வாய், 8 நவம்பர் 2022 (16:25 IST)
உலகக்கோப்பை டி20 போட்டியில் பரபரப்பான லீக் சுற்றில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது குறித்து பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் மேத்யூ ஹைடன் பேசியுள்ளார்.

உலகக்கோப்பை டி20 போட்டியின் லீக் சுற்றுகள் பல்வேறு பரபரப்பு இடையே நடந்து முடிந்துள்ளன. க்ரூப் 1 மற்றும் க்ரூப் 2 என தலா 6 அணிகளாக பிரிந்து விளையாடிய லீக் போட்டிகளில் இந்தியா தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தது. இரண்டாவது இடத்தில் இருந்த தென்னாப்பிரிக்காதான் அரையிறுதிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திடீர் திருப்பமாக தென்னாப்பிரிக்கா நெதர்லாந்து அணியிடம் தோல்வியடைய, அதேசமயம் பாகிஸ்தான் அணி பங்களாதேஷை வென்று தரவரிசையில் இடம்பிடித்து அரையிறுதிக்குள்ளும் நுழைந்து விட்டது. நாளை நியூஸிலாந்து அணியுடன் நடைபெறும் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் வென்றால் நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.

பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு குறித்து பேசிய அணி பயிற்சியாளர் மேத்யூ ஹைடன் “இந்த டி20 தொடரில் பாகிஸ்தானை அரையிறுதியில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எந்த அணியும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். நாங்கள் வெளியேறிவிட்டோம் என நினைத்துக் கொண்டிருந்தார்கள். அதிரடியாக உள்ளே நுழைந்துள்ளோம். இனி அவர்களால் எங்களை வெளியேற்றவே முடியாது” என்று கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LSG vs KKR: நாங்களும் ரவுடிதான்..! போராடி தோற்ற கொல்கத்தா! ரிஷப் பண்ட் நிம்மதி பெருமூச்சு!

LSG vs KKR: Badass மிட்செல் மார்ஷ், மரண மாஸ் நிகோலஸ் பூரன்! LSG அதிரடி ஆட்டம்! - சிக்கலில் KKR!

பாஜகவில் இணைந்த சிஎஸ்கே நட்சத்திர கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ்!

அண்ணன் என்னடா.. தம்பி என்னடா..! ஆட்டம்னு வந்துட்டா! தம்பி டீமை பொளந்து கட்டிய அண்ணன் க்ருனால் பாண்ட்யா!

மேல ஏறி வறோம்.. ஒதுங்கி நில்லு..! வொர்த்து மேட்ச் வர்மா..! - அட்டகாசம் செய்த RCB கோப்பையையும் வெல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments