சுடப்பட்ட அதே இடத்திலிருந்து மீண்டும் பேரணியை தொடருவேன் என முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் கடந்த வியாழனன்று பேரணி நடத்திக் கொண்டிருந்தபோது திடீரென மர்ம நபர் ஒருவர் அவரது காலில் துப்பாக்கியால் சுட்டார்
இதனையடுத்து கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நான் சுடப்பட்ட அதே இடத்திலிருந்து மீண்டும் பேரணியை தொடங்குவேன் என்றும் பேரணியில் உரையாற்றுவேன் என்றும் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்
இன்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் நாளையே அவர் பேரணியை தொடர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.