Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் - வங்காளதேசம் இடையே 2வது டெஸ்ட்; ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.. என்ன காரணம்?

Mahendran
வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (10:05 IST)
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கிடையே நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ரசிகர்கள் அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கும் நிலையில் முதல் டெஸ்ட் போட்டி வரும் 21ஆம் தேதி தொடங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி 30ஆம் தேதி கராச்சி நகரில் நடைபெற உள்ளது.
 
இந்த நிலையில் கராச்சியில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை செய்யப்பட்டிருந்தால் அதற்கான தொகை முழுவதுமாக திருப்பி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பாகிஸ்தானில் இன்னும் சில மாதங்களில் சாம்பியன் டிராபி தொடர் நடைபெற இருக்கும் நிலையில் கராச்சி மைதானத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அதனால் தான் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றும் ரசிகர்களின் பாதுகாப்பை கணக்கில் கொண்டு தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிதீஷ்குமார் ரெட்டி அதிரடி ஆட்டம்.. ஃபாலோ ஆனைத் தவிர்க்குமா இந்தியா?

ஈஷா கிராமோத்சவ விளையாட்டுத் திருவிழா; சிறப்பு விருந்தினராக கிரிக்கெட் வீரர் சேவாக் பங்கேற்பு!

அவுட் ஆகி வெளியேறிய போது கிண்டல் செய்த ஆஸி ரசிகர்கள்… திரும்பி வந்து முறைத்த கோலி!

கோலியை க்ளவுன் என விமர்சித்து கட்டம் கட்டும் ஆஸி ஊடகங்கள்… கடுப்பான இந்திய ரசிகர்கள்!

ஆட்ட நேர முடிவில் அடுத்தடுத்து விழுந்த விக்கெட்கள்… பரிதாப நிலையில் இந்திய அணி!

அடுத்த கட்டுரையில்
Show comments