சென்னையில் நடைபெறவிருக்கும் இரண்டு பிளே ஆப்போட்டிகளில் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு இலவச ரயில் சேவை கிடையாது என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டியில் சென்னையில் நடைபெறும் போட்டிகளுக்கு டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு இலவச ரயில் பயணம் என மெட்ரோ நிர்வாகம் சமீபத்தில் அறிவித்திருந்தது.
அதுமட்டுமின்றி சில மெட்ரோ ரயில் நிலையங்களில் பெரிய திரைகளில் போட்டியை நேரலை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னையில் இரண்டு பிளே ஆப்போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டிகளுக்கான டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு இலவச ரயில் சேவை வழங்கப்படாது என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
பிசிசிஐ தரப்பிடம் இருந்து எந்த கோரிக்கையும் வைக்கப்படாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேட்டூர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது